திருச்சி மாநாட்டில் அறிவித்தபடி வணிகர்களின் நலன்காக்கும் முதல்வரின் அரசாணை: விக்கிரமராஜா நன்றி

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சியில் நடந்த 39வது வணிகர் தின மாநில மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பித்தார். அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முதல்வரிடம் கோரிக்கை மனுவாக அளிக்கப்பட்டது. அமைந்திருக்கின்ற அரசு வணிகர்களின் நலன்காக்கும் அரசு என்று மாநாட்டு மேடையிலேயே அறிவித்து, அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வுகள் எட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் முதல்கட்டமாக, பாதிக்கப்படும் வணிகர்களுக்கு வணிகர்நல வாரிய திட்டத்தின் மூலம் ஏற்கனவே இருந்த ரூ1 லட்சம் குடும்ப நல உதவித்தொகை, ரூ3 லட்சமாக உயர்த்தி அரசாணை எண் 86 மூலமும், தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு ரூ5ஆயிரம் என உதவித்தொகை இருந்ததை ரூ20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை எண் 87 மூலமும் அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த மனிதநேய ஆணைக்காகவும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணையை வெளியிட்டிருப்பதற்கு அனைத்து வணிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: