சர்வதேச சமூகத்தின் முன் இந்தியாவை இழிவுபடுத்திய பாஜ நிர்வாகிகளின் செயல் தேசத்துரோகமானது: எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசியப் பொதுச்செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி வெளியிட்ட அறிக்கை: இறை தூதர் குறித்த பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் இழிவான மற்றும் அருவருப்பான பேச்சால், முஸ்லிம் நாடுகளிலிருந்து வலுவான மற்றும் பாதகமான எதிர்விளைவுகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தியதன் காரணமாகவே, அவரையும் டெல்லி பாஜ தலைவர் நவீன் ஜிண்டாலையும் இடைநீக்கம் செய்ய பாஜவுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சங்பரிவார் ஆட்சியில் சமீப ஆண்டுகளில் செழித்து வளர்ந்த ஒரே செயல்பாடு வகுப்புவாத தூண்டுதல், மதவெறி மற்றும் வெறுப்பு மட்டுமே. தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு மற்றும் கொடுமைகளை கட்டவிழ்த்து விடுபவர்கள், நிர்வாகத்திலும் அதிகாரத்துவத்திலும் உயர் பதவிகளை வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். உலக நாடுகளின் எதிர்வினைகள் காரணமாக வெறுப்பாளர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.சர்வதேச சமூகத்தின் முன் இந்தியாவை இழிவுபடுத்திய பாஜ நிர்வாகிகளின் செயல்  தேசத்துரோகமாகும். ஆகவே நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டாலை கைது செய்ய வேண்டும்.

Related Stories: