சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

டெல்லி : சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர்களில் ஒருவரான சத்யேந்திர ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் கடந்த மே 30ம் தேதி கைது செய்யப்பட்டார். சத்யேந்திர ஜெயினை ஜூன் 9ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் வீட்டில் அமலாக்கத்துறையயினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015, 2016ம் நிதியாண்டில் சத்யேந்திர ஜெயினின் நிறுவனம் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ரூ.4.81 கோடி ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது என்பது புகாராகும். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அமைச்சர் ஜெயின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: