சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பாக பங்களித்த தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

சென்னை: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து சென்னையில் உள்ள வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பாக பங்களித்தமைக்காக தொழிற்சாலைகள், அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு, ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் பசுமை முதன்மையாளர் விருதுகள் வழங்கினார்.

மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களில் பயணம் மேற்கொண்ட 37 பள்ளிகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். அதேபோல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களில் பயணம் மேற்கொள்ளப்பட்ட முதல் 20 பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும், அமைச்சர் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை துவக்கி வைத்தார். வாரியத்திற்கு 25 புதிய வானங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹு துவக்க உரை ஆற்றினார்.விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன், உறுப்பினர் செயலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: