தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்கான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பிலான 25 மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காற்று மாசுபடுதலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுசூழல்துறை சார்பில் பல்வேறு மென்னேற்பாடுகள் செய்து வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மின் வாகனம் வழங்கப்படும் என ஏற்கனவே சமீபத்திய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு 25 மின்வாகனங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முதற்கட்டமாக 10 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பசுமை விருதுகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

Related Stories: