புதுக்கோட்டை அருகே பள்ளத்துப்பட்டியில் ரயில்வே தரைப்பாலத்தில் மெகா பள்ளம்-விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மெகா பள்ளத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தினர் கீரனூர் விரைந்து வருவதற்கு புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஆள் இல்லா ரயில்வே கேட் இருந்தது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆள் இல்லா ரயில்வே கேட்டை எடுத்துவிட்டு தரைப்பாளம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்போதே அந்த கிரமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பல போரட்டங்கள் நடத்தினர்.

மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித பாதிப்புமின்றி மக்கள் பயன்பெறும் வகையில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்று ரயில்வே நிர்வாகம் உறுதியடுத்ததை எடுத்து கிராமத்தினர் பணிகள் நடக்க ஒத்துழைப்பு கொடுத்தனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறியது. தண்ணீர் வெளியேராமல் 5 மாதங்களாக தேங்கி கிடந்தது. இந்நிலையில் தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கீரனூர் வர சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி வரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த பாலத்தில் தண்ணீர் தேங்கி இருந்த போதுதான் ஆடு திருடர்ளை விரட்டு வரும்போது அந்த பாலம் வழியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு, திருச்சி மாவட்டம் நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது தரைப்பாலத்தில் தண்ணீர் வற்றி பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பலத்தில் நடுப்பகுதியில் குண்டும், குழியும் ஏற்பட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் அந்த வழியை பயன்படுத்தினாலும் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். இதனால் பள்ளத்துப்பட்டி கிராமத்தினர் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தரைப்பாலத்தை போக்குவரத்து செல்லும் வகையில் மாற்றி தர தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலரை பலிவாங்கிய பள்ளம்

நார்த்தாமலை அருகே உள்ள தொடையூர் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியிருந்தபோது அந்த வழியாக காரில் சென்ற பெண் மருத்துவர் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தரைப்பாலம் தற்போது செயல்படாமல் உள்ளது. இப்படி பல உயிரழப்புகளை ஏற்படுத்தும் தரைப்பாலத்திற்கு மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: