திருப்பத்தூர் மாவட்டத்தில் 6,000 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்: எஸ்பி தலைமையில் அதிரடி

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்பி தலைமையிலான ேபாலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6,000 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். 2 பேரை கைது செய்தனர்.திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், தமிழக- ஆந்திர எல்லை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சாராய வேட்டை நடத்தினர். அப்போது, மலைப்பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் 6,000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள், 500 லிட்டர் சாராயம், கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஆகியவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மேலும், பேரணாம் பட்டிலிருந்து ஆம்பூர் அடுத்த உமராபாத்துக்கு ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி சென்ற கோட் டசேரியை சேர்ந்த  திருமூர்த்தி (35), மணி (30) ஆகிய 2  பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து எஸ்பி பாலகிருஷ்ணன் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து நாள்தோளும் அதிரடி சாராய வேட்டை நடத்தப்படும். மாவட்டத்தை கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாராய வியாபாரிகள் மனம் திருந்தி வியாபாரத்தை விடுவதாக தெரிவித்தால், அவர்களுக்கு அரசின் சார்பில் சீர்திருத்த அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்ட காவல்துறை தயாராக உள்ளது என்றார்.

Related Stories: