பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்..!

அலகோஸ்: பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கின. மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மோசமடைந்துள்ளன. ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் இருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: