சேவை, நல்லாட்சி, ஏழை நலன்-இதுவே மோடி அரசின் செயல்பாடு!: இந்திய அரசியல் 8 ஆண்டுகளில் மாறியுள்ளது..பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேட்டி..!!

டெல்லி: இந்திய அரசியல் கலாச்சாரம் 8 ஆண்டுகளில் மாறியுள்ளது என்று பாஜக தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்று இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அவர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதேபோல முதன்முறையாகக் காங்கிரஸ் பலத்த அடியையும் சந்தித்தது. தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 8 ஆண்டு நிறைவையொட்டி ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா, அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஜெ.பி.நட்டா, கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்; எதுவும் நடத்தி முடிக்கப்படும் என்ற நேர்மறையான நிலை உருவாகியுள்ளது. சேவை, நல்லாட்சி, ஏழை நலன், இதுவே மோடி அரசின் செயல்பாடு; மோடி அரசின் ஆன்மா என்று குறிப்பிட்டார். 8 ஆண்டுகால ஒன்றிய அரசின் நல திட்டங்கள், வெளியுறவு கொள்கைகள் அடங்கிய பாடல் வெளியிடப்பட்டது.

Related Stories: