அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும்: காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும் என காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில்; மாடியிலிருந்து தனது மகன் கீழே விழுந்ததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் என்னை அழைத்தது. குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு தன்னை போலீஸ் துன்புறுத்தினர்.

தன்னை 3 வெவேறு விடுதிகளில் வைத்து போலீஸ் மிரட்டியதோடு ஆபாசமான வார்த்தைகளை கூறி மன உளைச்சளை ஏற்படுத்தினர் என அப்போதைய பழவந்தாங்கல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது தனலட்சுமி புகார் கூறியிருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும் என காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமூகத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள இயலாத மக்களிடம் போலீஸ் அதிகாரத்தை காட்ட கூடாது.

மனித உரிமைகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு ரூ.2.90 லட்சம் இழப்பீடாக தர உத்தரவிட்டனர். அப்போதைய காவல் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட காவலர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: