துப்பாக்கி கலாசாரத்தை ஆதரித்து ஆட்டம் போட்ட மாஜி அதிபர் டிரம்ப்: பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம்

நியூயார்க்: ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும் எனக்கூறிய முன்னாள் அதிபர் டிரம்ப், தேசிய துப்பாக்கி சங்க மாநாட்டில் ஆட்டம் போட்டார். அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு ஆசிரியைகள், 19 பள்ளிக் குழந்தைகள் என 21 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேசிய துப்பாக்கி சங்கத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் அதிபர் டிரம்ப், 1966ம் ஆண்டு சாம் மற்றும் டேவ் எழுதிய பாடலுக்கு நடனமாடிக் கொண்டே, துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பெயர்களை வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும்’ என்று கூறினார். டிரம்பின் துப்பாக்கி பரிந்துரை மற்றும் நடனம் ஆடியதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஊடக இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ரோஹ்லீன் கூறுகையில், ‘டெக்சாசில் நடந்த துப்பாக்கி சூட்டிக் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்கள் இன்னும் புதைக்கப்படவில்லை; ஆனால் தேசிய துப்பாக்கி சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் டிரம்ப் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியாக உள்ளார். துப்பாக்கிகளை ஆசிரியர்களும், மாணவர்களும் வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறிய பரிந்துரைகள் வெறுக்கத்தக்கது’ என்றார்.

Related Stories: