கணவன் (அ) மனைவி இறப்பு சான்றிதழ் மட்டும் போதும்!: பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றும் நடைமுறையை எளிமையாக்கியது தமிழக அரசு..!!

சென்னை: பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு எளிமையாக மாற்றியுள்ளது. சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி மனிதவள மேலாண்மை துறை மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்த போது குடும்ப ஓய்வூதியம் குறித்து பேசியிருந்தார். அதில், தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதை எளிமையாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்ற கால தாமதம், நடைமுறைச் சிக்கல் உள்ளதாக அரசு கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

எனவே தற்போது நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை எளிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. புதிய ஓய்வூதியதரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன் (அல்லது) மனைவி விவரங்கள் பதியப்படும். இனி குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் (அல்லது) மனைவி இறப்புச் சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஓய்வூதியதாரர்களுக்கு பயன்பாட்டில் உள்ள கூடுதலான விவரங்களை கூறும் படிவம் 14 க்கு பதிலாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு எளிதான படிவம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு எளிமையாக மாற்றியுள்ளது.

Related Stories: