மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரொக்கமாக கிடைக்கும்

சென்னை: தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்போது பாதி தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. இந்த முறையை மாற்றி முழுத் தொகையையும் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ₹50 ஆயிரம் மற்றும் ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ₹25 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்த திருமண உதவித் தொகை தற்போது பயனாளிகளுக்கு முழு தொகையையும் ரொக்கமாக வழங்க அரசு ஆணையிடுகிறது.

Related Stories: