பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைத்தான் முதல்வர் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி

சென்னை: பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார் என்று அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். மதிமுக  தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு  சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அறை ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. அந்த அறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த  தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார். பின்னர் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திற்கான   தேவைகளைத்தான் முதல்வர் நேற்று பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் பேசி  உள்ளார். இலங்கை இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் கச்சத்தீவை  மீட்க வேண்டியதை சுட்டிக்காட்டி உள்ளார். பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர்  அரசியல் பேசி உள்ளதாக அண்ணாமலை கூறிய கருத்து அவதூறானது.சட்டம்- ஒழுங்கு பொறுத்தவரை சிறப்பான, சரியான முறையில் முதலமைச்சரும், சைலேந்திரபாபுவும் செயல்படுகின்றனர்.

தேசிய  கல்விக் கொள்கையில் அமித்ஷா ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி என  தெரிவித்திருந்தார். இந்திய தேசிய கல்வி கொள்கைகளும் அதேதான்  கூறியிருக்கிறது. தேசிய கல்வி கொள்கை செயல்பட்டால் ஒன்று மாநில மொழி  இருக்கும். மற்றொன்று ஆங்கிலம் மொழி இல்லாமல் இந்தி மொழியாக இருக்கும். அமித்ஷா, தமிழக மக்களிடம் மோடி மீது அன்பும்  ஆதரவும் பெருகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அது தேர்தல் வரும்போது தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: