தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் முன்னிலையில் Pacedigitek என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  முன்னிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தவுள்ள முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளரான M/s.Pacedigitek (தொகுப்பு B) என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்களை (Master Services Agreement) இன்று (27.05.2022) கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்  பாரத்நெட் திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டம் எனவும் இத்திட்டத்தினை “தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)” என்ற சிறப்பு நோக்கு நிறுவனம், ரூ.1815.32 கோடி செலவில் செயல்படுத்தும் எனவும் இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாவட்டங்கள் வாரியாக நான்கு தொகுப்புகள் (A, B, C & D) பிரிக்கப்பட்டு, தொகுப்புக்கு ஒருவர் என நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், தணிக்கை மற்றும் ஆய்வு செய்ய மூன்றாமவர் முகமையும் (Third Party Agency -TPA) தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே திட்ட ஒருங்கிணைப்பாளர்களான M/s. L&T (தொகுப்பு C), M/s. ITI(தொகுப்பு D) மற்றும் மூன்றாமவர் முகமையான M/s. BECIL ஆகிய நிறுவனங்களுடன், முதன்மைச் சேவை ஒப்பந்தங்களை (Master Services Agreement) 20.10.2021 மற்றும் M/s. Polycab (தொகுப்பு A) 30.03.2022 அன்றும் கையெழுத்திடப்பட்டு தொகுப்பு A, C&D-இன் கீழ் உள்ள மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம், தொகுப்பு B-இல் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. தொகுப்பு B-இன் கீழ், விழுப்புரம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3001 கிராம பஞ்சாயத்துகளும், பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு 1 Gbps அளவிலான அலைக்கற்றை சேவை வழங்கப்படும்.

பாரத்நெட் திட்டத்தின் மூலம், அனைத்து கிராமப்புறங்களுக்கும், குறைவான விலையில் மற்றும் தரமான “டிஜிட்டல்” (Digital) சேவைகள், மின்கல்வி (e-Education), தொலைமருத்துவம் (Tele Medicine), இணையதள இணைப்பின் மூலம் மூன்று விதமான சேவைகள் (Triple Play) ஆகிய சேவைகளை வழங்க முடியும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினை பெறமுடியும். இத்தகைய சேவைகளை வழங்குவதன் மூலம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய இத்திட்டம் வழி வகுக்கும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.கே.கமல்கிஷோர், பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் நிறுவனத்தின் (BBNL) தலைமைப் பொதுமேலாளர், கலைவாணி, பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் நிறுவனத்தின் (BBNL) முதன்மை பொதுமேலாளர் சந்திரசேகர், திட்டத்தை செயல்படுத்த உள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: