ஒரு கிலோ தக்காளி 40க்கு விற்பனை

சென்னை:  கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டு தக்காளி 100க்கும், பெங்களூர் தக்காளி  110க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வரத்து குறைந்து, தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து, தமிழக அரசு எடுத்த முயற்சியால், 110 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி விலை படிப்படியாக குறைந்துள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் ஒரு கிலோ நாட்டு தக்காளி ₹55க்கும், பெங்களூர் தக்காளி ₹80க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காலை 60 வாகனங்களில் சுமார் 900 டன் தக்காளி வந்தது.

இதனால் ஒரு கிலோ நாட்டு தக்காளி ₹40க்கும், பெங்களுர் தக்காளி ₹50க்கும் விற்பனை ஆனது.இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளின் தலைவர் எஸ் எஸ் முத்துகுமார் கூறுகையில்,‘‘ வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ₹40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வந்த தக்காளியின் விலையை குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட அதிரடி முயற்சியால்  அதன் விலை குறைந்துள்ளது. இதனால், இல்லதரசிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தக்காளியின் விலை குறையும்.’’ என கூறினார்.

Related Stories: