கந்தர்வகோட்டை பகுதியில் மானாவாரி சாகுபடியில் எள் அறுவடை தொடக்கம்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் சம்பா நெல் அறுவடைக்கு பிறகு குறுவை நெல் சாகுபடியும், சிறு தானியங்கள், எண்ணெய் பயிர்களான கடலை, எள், சாகுபடி செய்து வருகிறார்கள். தற்சமயம் கடலை சாகுபடி முடிந்து எள் அறுவடை நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் வயலில் உள்ள எள் பயிர்களை அறுவடை செய்து களத்திற்கு கொண்டு வந்து போர் கட்டி சில தினங்கள் கழித்து எள் போர்களை உடைத்துவிட்டு செடிகளை காய வைத்து வருகிறார்கள். எள் காய்கள் காய்ந்து தெறித்தவுடன் அதனை சேகரித்து வருகிறார்கள். அரசு நியாயவிலை அங்காடிகளிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் விவசாயிகளிடமிருந்து எள், கடலைகளை கொள்முதல் செய்து அதனை அரைத்து எண்ணையாக மானிய விலையில் வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் எண்ணையை நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ளலாம் என்றும், விவசாயிகள் பயிர் செய்யும் எண்ணை வித்துகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

உள்நாட்டு தயாரிப்பான தரமான சமையல் எண்ணெய் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்று கூறி வருகின்றனர். இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டால் விவசாயிகளின் வாழ்வாதரம் உயரும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: