அலுவலகங்களில் புகார் குழு அமைத்து பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை: மாநில மகளிர் ஆணைய கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி அனைத்துத்துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில், சென்னை கலெக்டர் விஜயா ராணி, வருவாய் அலுவலர் ஜெயராஜ், சென்னை கலெக்டர் நேர்முக உதவியாளர் கியூரி, குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் சியாமளா தேவி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்தும், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, மேம்பாட்டு வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்தும், அவற்றினை பொதுமக்களிடம் எடுத்து செல்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டியவை குறித்தும்ஆலோசிக்கப்ட்டது. மேலும் உள்ளூர் புகார் குழு அமைத்து பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் குறித்த விவாதங்கள் மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் புகார் குழுக்கள் அமைத்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் களையப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: