செங்கல்பட்டில் திடீர் கனமழை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிங்கப்பெருமாள் கோயில், ஆப்பூர், ஆலப்பாக்கம், வல்லம், கொண்டமங்களம், அனுமந்தபுரம், பொன்விளைந்த களத்தூர், செட்டிபுண்ணியம், வீராபுரம் உள்பட பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடுமையான வெயில் வாட்டியது.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வெப்பம் அதிகரித்து இருந்தது. மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், குளிர்ச்சியான காற்று வீசியது. சிறிது நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த சூறைக்காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்தனர். சில கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

Related Stories: