ஐபிஎல் 2022 எலிமினேட்டர் போட்டி; இறுதிச் சுற்றுக்கு செல்லும் அணி ஏது: லக்னோ, பெங்களூரு அணி மோதல்

கொல்கத்தா: இன்றைய போட்டி மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்பு மைதானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு போட்டி தொடங்குவதறடகான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களுரு அணி களமிறங்க  உள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகின்றன. புது அணியான கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்குள் வந்தது.  பேட்டிங்கில் டி காக் 502, ராகுல் 537, தீபக் ஹூடா 406 ரன் எடுத்து சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ்கான், மொசின் கான், ரவி பிஷ்னோய், ஹோல்டர்வலு சேர்க்கின்றனர்.

மறுபுறம் பெங்களூரு லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்வி என 18 புள்ளியுடன் 4வது இடம்பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் கேப்டன் டூபிளசிஸ் 443 பார்மில் உள்ளார். கோஹ்லி, மேக்ஸ்வெல் ஆட்டத்தை கணிக்க முடியவில்லை. லெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் அதிரடியில் மிரட்டி வருகிறார். பந்து வீச்சில் ஹசரங்கா 24, ஹேசல்வுட் 15 விக்கெட் எடுத்துள்ளார். காயம் அடைந்துள்ள ஹர்ஷல் பட்டேல் (18 விக்கெட்)இன்று களம் இறங்குவது சந்தேகம் தான். இந்த சீசனில் கடந்த ஏப்.19ம் தேதி மோதிய ஆட்டத்தில் ஆர்சிபி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பழிதீர்க்க லக்னோ போராடும். இன்று வெற்றிபெறும் அணி ராஜஸ்தானுடன் குவாலிபயர் 2 போட்டியில் ஆடும். தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

Related Stories: