லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருப்பதி: சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி, எதிரே வந்த பைக் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.

லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்திலிருந்து தப்பி, விபத்து குறித்து தகவல் அளித்ததன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்று ஒருமணி நேரத்திற்கு பின்னர் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

Related Stories: