மருத்துவர் பணிமாறுதல் கலந்தாய்வு வெளிப்படைதன்மையோடு நடக்கிறது.: 4,308 பணியிடங்கள் செப்டம்பரில் நிரப்பப்படும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:  சென்னை மருத்துவக் கல்வி இயக்குரகத்தில் நடைபெற்ற மருத்துவர்களின் பணிமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று பணிமாறுதல் பெற்ற மருத்துவர்களுக்கு ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர்  மருத்துவர் நாராயண பாபு மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர்கள் கலந்து  கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் தலைமையில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி மாறுதல் என்பது மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு நடந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முதல் 1,008 மருத்துவர்களுக்கான கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது.  அதேபோன்று பொதுசுகாதாரம்  மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 1000 இடங்களுக்கு மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஜூன் முதல் வாரத்தில் பணி மாறுதல்கள் நடைபெற உள்ளது. இத்துறையில்  47 வகையான மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு பணி மாறுதல் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் தற்போது வெளிப்படைத் தன்மையோடு நடைபெற உள்ளது. மேலும் இத்துறையில் மருத்துவர் காலியிடங்கள் 1021, 18 வகையான சுகாதாரப் பணியாளர்கள் ஆக மொத்தம் 4,308  இடங்கள் காலியாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் மேற்கண்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விமான நிலையத்தில் கண்காணிப்பு

கன்னியாகுமரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியாவில் 2, பெல்ஜியம் 3,  கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், யுஎஸ்  உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் புதிய  ெதாற்றுகள் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பயமுறுத்தும். ஆனால் புதிதாக இந்த  நாடுகளில் இருந்து குரங்கு அம்மை தோன்றியுள்ளது. இந்த நாடுகளிலும் உயிரிழப்பு இல்லை. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து  தமிழகம் வருபவர்களை கண்காணிக்க, விமான நிலையத்தில் வருகின்றவர்கள் முகம்,  உடலில் மாற்றம் தெரிந்தால், வடுக்கள் கொப்பளம், தெரிந்தால் உடனே  கண்டுபிடித்து மருத்துவ அலுவலர்கள் மாதிரி எடுத்து புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளார். எனவே மக்கள் அச்சம், கவலைப்பட தேவையில்ைல. இது தொற்றும்  தன்மை இல்லை, உயிரிழப்பு இல்லை, எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சம் வேண்டாம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: