பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 112 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் நலத்துறை ஆணையம் தகவல்

சென்னை: பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 112 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை-2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.  சென்னை-2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று அறிவிப்பு செய்ததை தொடர்ந்து இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

அதனை ெதாடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் ெதாழிலாளர் ஆணையர்இ சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர், ெதாழிலாளர் இணை ஆணையர்-1 ஆகியோரது அறிவுரைகளுக்கிணங்க கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்துதர தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் சென்னை 2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக நிர்வாக எல்லையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கூட்டாய்வில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 112 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும்பணியிடத்தில் இருக்கை வசதி செய்து தர வேண்டும்.

Related Stories: