ஒரே நேரத்தில் 3 பைக் திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். நேற்று காலை  தமிழ்ச்செல்வன் வேலைக்கு செல்வதற்கு புறப்பட்டபோது, பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதேபோல், நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் அருகே பெரிய செங்குன்றம் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த 2 பைக்குகள் மாயமானதாக, மறைமலைநகர் போலீசாருக்கு புகார் வந்தது.

போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவை  ஆய்வு செய்தபோது, 2 பேர் பைக்கை திருடியது தெரிந்தது. மேலும் விசாரணையில், சென்னை முகலிவாக்கத்தில் நேற்று முன்தினம் கூரியர் நிறுவன ஊழியரின் பையை திருடிய 2 பேர், 3 பைக்குகளை திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: