குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் 14 சதவீத அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஓய்வுபெற்ற பெரும்பாலான ஊழியர்கள் வறுமை நிலையில் இருப்பதாகவும், மருத்துவம் மற்றும் வீட்டு வாடகைக்கு மட்டுமே பெரும் தொகை செலவிடப்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே, இந்த தருணத்தில் 14 சதவீத அகவிலைப்படி உயர்வை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரொக்கமாக அளித்தால் பேருதவியாக இருக்கும். பணியில் இருப்போருக்கு வழங்கப்படும்போது ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை இனி வருங்காலங்களில் கடைபிடிக்க வேண்டுமென்றும் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், பிற வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இதுபோன்று வழங்கப்படாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: