ஆவடி திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்; அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு

ஆவடி: ஆவடியில் நேற்றிரவு திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். திமுக சாா்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு ஆவடியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். இதில் தலைமை கழக பேச்சாளர்கள் கவிஞர் நன்மாறன், கரூர் முரளி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.

இக்கூட்டத்தில், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயண அனுமதி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என பல்வேறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றியது, ஆவடி தொகுதிக்கு உட்பட்ட அராபத் ஏரி தூர்வாரி, பன்னாட்டு பூங்கா அமைத்தல், கோவில்பதாகையில் கோசாலை அமைத்து, ₹2.5 கோடி மதிப்பிலான அறிவுசார் மைய கட்டிடம் அமைத்தல், நரிக்குறவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதை குறித்து அமைச்சர் சா.மு.நாசர் விரிவாக எடுத்துரைத்தார்.

இதில் ஆவடி தெற்கு மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், ஆவடி மாநகர மேயர் கு.உதயகுமார், ஆவடி நகர செயலாளர் பேபி சேகர், ஆவடி மேற்கு நகர செயலாளர் பொன்.விஜயன், ஆவடி வடக்கு நகரச் செயலாளர் ஜி.நாராயண பிரசாத்,  கழக மாணவரணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர் டி.ஜே.ரமேஷ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜி.விமல்வர்மன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கு.சேகர், திருநின்றவூர் நகர செயலாளர் தி.வே.ரவி, திருவேற்காடு நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமா என்இகே.மூர்த்தி, தங்கம் முரளி மற்றும் ஆவடி மாநகர மண்டல குழு தலைவர்கள் அமுதா, ஜோதிலட்சுமி, அம்மு, பொன்.விஜயன், எஸ்.என்.ஆசிம்ராஜா, சண்.பிரகாஷ், யுவராஜ் உள்பட 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: