தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்களாக நவாஸ் கனி எம்பி, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, அப்துல் வகாப் உள்பட 9 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்களாக மாநிலங்களவை உறுப்பினர் நவாஸ்கனி, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, அப்துல் வகாப், நாகப்பட்டினம் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் மசூதிகள் சங்க தலைவர் எஸ்.சையது முகமது கைப் சாஹிப் கத்ரி, சென்னை அடையாறு கவுரசனி பீர் மஸ்ஜித் தலைமை இமாம் எம்.சைதுதீன் பாசில் பாகவி, ஷியா பிரிவு தலைமை காஜி மவுலானா குலாம் முகமது மேகிதி கான், திருப்பூரைச் சேர்ந்த அல்தாப் உசேன், சென்னையை சேர்ந்த குணங்குடி ஆர்.எம்.ஹனீபா, சென்னை புரசைவாக்கம் மசூதி தலைவர் நாகூர் ஏ.எம்.நஜிமுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: