கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியது

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் மாயமான நிலையில், அவரது நகைகள் மட்டும் தப்பித்தது. பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் தமிழ் பட நடிகையான பூஜா ஹெக்டேவும் முதன்முறையாக இந்த விழாவில் கலந்துகொண்டார். விழாவில் அவர் தனது அசத்தலான பாணியில் ஆடைகளை அணிந்து கலக்கினார். ஆனால், அவருக்கு சோகமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. பிலிம் கம்பேயனுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘என்னுடைய மேக்கப் பொருட்கள், உடைகள் அனைத்தையும் சூட்கேசில் வைத்திருந்தேன். கேன்ஸ் விழாவில் பங்கேற்கும் முன்பு, எல்லா பொருட்களும் எங்களுடன் இருந்தது. ஆனால், உடைகள் இருந்த சூட்கேஸ் எங்கே போனது என்று தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் கொண்டுவந்த நகைகள் அனைத்தையும் அணிந்து இருந்ததால் அவை அனைத்தும் தப்பித்தது.

என்னுடன் வந்த எனது குழுவினர் பதற்றமாகவே இருந்தனர். அவர்களை எவ்வளவோ சமாதானப்படுத்தி னேன். ஒரே குழப்பமான மனநிலையில் இருந்தோம். காலை, மதியம் உணவு சாப்பிடவில்லை. பகலில் சாப்பிட வேண்டிய உணவை இரவில் சாப்பிட்டேன். எனது சிகையலங்கார நிபுணர் மயக்கம் அடையும் நிலையில் இருந்தார். எப்படி எனது சூட்கேஸ் மாயமானது என்பது தெரியவில்லை’ என்றார்.

Related Stories: