ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 624 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை!!

சென்னை: அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்கும் பெரும் சிரமத்தில் உள்ளனர்

குறிப்பாக அட்சயதிருதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,755க்கும், சவரனுக்கு ரூ128 உயர்ந்து ஒரு சவரன் ரூ38,040க்கும் விற்கப்பட்டது. நேற்றும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ38 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,793க்கும், சவரனுக்கு ரூ. 304 அதிகரித்து ஒரு சவரன் ரூ38,344க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 432 உயர்ந்தது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.24 உயர்ந்து 4,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று ஒரு கிராம் வெள்ளி 65.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Related Stories: