தொழிலில் நஷ்டம் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டதால் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45).  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி  லதா (40). இவர்களுக்கு பிரசன்னா (17), மதுமிதா (15), என இரண்டு குழந்தைகள்  உள்ளனர். ரமேஷ், 2வதாக பிரியதர்சினி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

நேற்று பிரியதர்ஷினி வீட்டில், தனது அறைக்கு சென்ற ரமேஷ் வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பிரியதர்ஷினி கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து வந்த திருவேற்காடு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில்  ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும்,  வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: