புழுதிவாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் ரூ.93.74 கோடியில் மழைநீர் கால்வாய் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: பெருங்குடி மண்டலம் 185வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில், ஜெர்மனி நாட்டின் நிதி உதவியுடன் ரூ.93.74 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன்,  மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், செயற்பொறியாளர் முரளி,  புருஷோத்தமன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

 அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர்கள் சர்மிளா திவாகர், ஸ்டெர்லி ஜெய், சமினா செல்லம், பள்ளிக்கரணை பாபு, திமுக நிர்வாகிகள் குமாரசாமி கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் சிவசங்கரன், சொக்கலிங்கம், குபேரா, யோகராஜன், சரவணன், தினேஷ், ஜெயக்குமார், சதீஷ், ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: