சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: 1987-ல் நடந்த சாலை விபத்து தொடர்பான வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிய நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: