ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் குடும்பத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. விடுதலையை வரவேற்று பேரறிவாளனை கட்டித்தழுவி உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டை இல்லத்தில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தற்போது பேரறிவாளன் விடுதலை குறித்து தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இத்தனை வருட போராட்டத்திற்கு பிறகு, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்; இத்தனை வருடங்களாக போராடி பேரறிவாளனின் விடுதலையை பெற்றுள்ளார். எனவே, அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். மேலும், ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.    

Related Stories: