படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தங்கம் விலை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் 13ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.544 குறைந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. 14ம் தேதி தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.18 குறைந்து ஒரு கிராம் ரூ.4,737க்கும், சவரனுக்கு ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.37,896க்கும் விற்கப்பட்டது. 2 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.688 குறைந்தது. 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் குறைந்தது.

கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.4,728க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்தது ஒரு சவரன் ரூ.37,824க்கு விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்தது. அதே நேரத்தில் பல மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.36 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,764க்கும், சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,112க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: