தசாவதாரம் 2ம் பாகம் உருவாக்கவே முடியாது: சொல்கிறார் கே.எஸ்.ரவிகுமார்

சென்னை: தசாவதாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியாது என்று இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூறினார். கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ள கூகுள் குட்டப்பா என்ற படம் சமீபத்தில் வெளிவந்தது. இது தொடர்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தசாவதாரம் படத்தின் 2ம் பாகம் வெளிவருமா என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்டதற்கு பதில் அளித்து கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: கமல்ஹாசன் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர்.  தசாவதாரம் படத்துக்கும் மிக கடுமையாக உழைத்தார். தசாவதாரம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுகுறித்து கமல் 2 மணி நேரம் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை எங்களால் உருவாக்கவே முடியாது. எனவே தசாவதாரம் 2ம் பாகத்திற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு ரவிகுமார் கூறினார்.

Related Stories: