ரோஜா கண்காட்சி நிறைவு விழாவில் அருவங்காடு கார்டைட் பேக்டரிக்கு `பெஸ்ட் ப்ளூம் ஆப் தி ஷோ’ சுழற்கோப்பை

ஊட்டி :  ஊட்டியில் நடைபெற்ற 17வது ரோஜா கண்காட்சி நிறைவு விழாவில் `பெஸ்ட் ப்ளூம் ஆப் தி ஷோ’ சுழற்கோப்பையை அரவங்காடு கார்டைட் பேக்டரி பெற்றது.

ஊட்டியில் நேற்று முன்தினம் ரோஜா கண்காட்சி துவங்கி இரு நாட்கள் நடந்தது. இந்த கண்காட்சியின் போது தனியார் பூங்காக்கள், அரங்குகள் மற்றும் பல்வேறு அலங்கார போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, ரோஜா கண்காட்சி நிறைவு விழா ஆகியவை பூங்கா நிலா மாடத்தில் நேற்று மாலை நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குனர் ஷிபிலா மேரி வரவேற்றாா். மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பேசினார்.

சிறந்த அரங்குகள் மற்றும் தோட்டம் அமைத்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு: ‘பெஸ்ட் ப்ளூம் ஆப் தி ஷோ’ சுழற்கோப்பை, சிறந்த ரோஜா அலங்காரங்களுக்கான சுழற்கோப்பை ஆகியவற்றை அருவங்காடு கார்டைட் பேக்டரி பெற்றது. மலர் தொட்டிகளில் சிறந்த ரோஜா மலர்களை வைத்திருந்ததற்கான சுழற்கோப்பையை குட் ஷெப்பர்டு பள்ளி பெற்றது. வணிக ரீதியிலான ரோஜாக்களை வைத்திருந்தற்கான சுழற்கோப்பையை ஜென்சி கிஷோர் பெற்றார்.

மேலும், தொட்டிகளில் சிறந்த ரோஜா மலர்கள் வைத்திருந்தவர்கள், தனியார் பூங்காக்கள் வைத்திருந்தவர்கள், பல்வேறு வகையான ரோஜா மலர்களை வைத்திருப்பவர்கள், வியாபார ரீதியாக ரோஜா மலர்களை உற்பத்தி செய்தவர்கள் உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மலர் அலங்காரங்கள் அமைத்திருந்த பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறையினருக்கும் பாிசுகள் வழங்கப்பட்டன. ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: