உதகை அரசு பூங்காவில் 17-வது ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்: 50 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு மர வீடு, கார்ட்டூன் பொம்மைகள் வடிவமைப்பு

உதகை: உதகை அரசு பூங்காவில் 17-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்குகிறது. 50 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு மர வீடு மற்றும் கார்ட்டூன் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை தொடங்கும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்க ரோஜாக்களை கொண்டு மர வீடு, மான், பனிமனிதன், கார்ட்டூன் பொம்மைகள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக ரோஜா கண்காட்சி நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெறுகிறது. 4,500 ரகங்களில் 40 ஆயிரம் ரோஜா செடிகளில் பலவண்ண ரோஜாக்கள் பூத்துக்குலுங்குவதால் பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். மலைகளின் அரசி ரோஜா மலர் கண்காட்சியுடன் தொடங்கும் நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலிலும் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

அங்குள்ள பிரையன் பூங்காவில் காலையில் இதழ் விரித்து மாலையில் இதழ் மூடும் கலிபோர்னியாபாபி மலர்கள் பூத்துகுலுங்க துவங்கியிருக்கிறது. இதழ் மூடி விரியும் தன்மையால் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.               

Related Stories: