குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ முகாம்

வாலாஜாபாத்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி  பணிகள் திட்ட சார்பில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கலெக்டர் ஆர்த்தி முகாமை துவக்கி வைத்தார். அப்போது, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன கொடுக்க வேண்டும், பிறந்தது முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு என்ன சத்தான உணவுகளை வழங்க வேண்டும்.  தமிழக அரசு குழந்தைகளுக்கு செய்யும் நல திட்டங்கள், மருத்துவ வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். மேலும், குழந்தைகளுக்கான தானிய உணவு, காய்கறிகள், கீரை, பழ வகைகள், மாவுச்சத்து உணவு வகைகள் காட்சி  நடந்தது.

இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், அமல்ராஜ், தாசில்தார் லோகநாதன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சுசித்ரா, ஊத்துக்காடு ஊராட்சி தலைவர் சாவித்திரி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: