ரேஷனில் தரமற்ற அரிசி வழங்க வேண்டாம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தல்

சென்னை: தரமற்ற அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டாம் என்று சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று சென்னை,  ராஜா அண்ணாமலை மன்றத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், பொது  விநியோகத் திட்டத்தின் சிறப்புகள் குறித்தும், நியாய விலைக் கடை பணியாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், மக்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டாம், விற்பனையாளர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பிரச்னைகளை நேரடியாக 9884000845 எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம்  தொடர்பு கொள்ளலாம். நியாய விலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மேற்படி பயிற்சி முகாமில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜாராமன் கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டக் கட்டமைப்பு, பொது விநியோகத் திட்ட நோக்கம் ஆகியவை குறித்து எடுத்துரைத்து, பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த கேட்டுக் கொண்டார். பயிற்சி முகாமில், கூட்டுறவுச் சங்கங்களில் கூடுதல் பதிவாளர் அருணா  கலந்து கொண்டு நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கும், இணைப்பதிவாளர் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் மற்றும் உணவு வழங்கல் துறை துணை ஆணையர் ஆகியோர் பொது விநியோகத் திட்டம் குறித்து சிறப்பு பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில் இணைப் பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர், பணியாளர் அலுவலர், துணைப்பதிவாளர்  பூங்கா நகர்-1, துணைப்பதிவாளர் பிரதம பண்டக சாலைகள் வடக்கு மற்றும்   தெற்கு , துணைப்பதிவாளர்  புறநகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: