சதுரகிரி கோயிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு, பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (மே 13) முதல் 16ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.  காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வருவதற்கு அனுமதி இல்லை. இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஓடைகளில் பக்தர்கள் யாரும் குளிக்கக்கூடாது என கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெறவுள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்துள்ளனர். மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை செய்ய வாய்ப்புள்ளது.

Related Stories: