ஊட்டியில் சாரல் மழை பெய்ததால் படகு சவாரி செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி உள்ள நிலையில் தினமும் அதிக சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், குளு குளு காலநிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல் மேகமூட்டமான காலநிலை நிலவிய நிலையில், படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மதியத்திற்கு பின் லேசான சாரல் பெய்த நிலையில், மிக குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே படகு சவாரி செய்தனர்.

மாலையில் மழை சற்று கூடுதலாக பெய்த நிலையில் மிதி படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. அதற்கேற்ப சிறிது நேரம் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் படகு சவாரி செய்த விரும்பியவர்களும் மழை காரணமாக படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

Related Stories: