வரும் 28-ல் ஜனநாயக சக்திகளை திரட்டி ஆளுநர் மாளிகை முற்றுகை: எஸ்டிபிஐ மாநில தலைவர் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைமையகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி: ஜனநாயக வழியில் செயல்பட்டு வரும் பாப்புலர் ப்ரண்ட் செயல்பாடுகள் குறித்து தமிழக ஆளுநர் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். ஆனால் தமிழக மக்கள் அதன் சேவைகளை நன்கு அறிவார். அரசியலமைப்பு சட்டத்தின்படி பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தின் ஆளுநர், உடனடியாக தமிழக ஆளுநர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். ஆளுநரின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கைகள், மாநில அரசை மதிக்காத போக்கு, ஜனநாயக அமைப்புகள் குறித்த அவதூறு போன்ற நடவடிக்கைகளை கண்டித்து எதிர்வரும் மே 28ம் தேதி, ஜனநாயக சக்திகளை திரட்டி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியும், முற்றுகைப் போராட்டத்தையும் நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி முடிவு செய்துள்ளது என்றார். பேட்டியின் போது எஸ்.டி.பி.ஐ. மாநில துணைத்  தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், நிஜாம்  முகைதீன், அகமது நவவி, அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: