தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினர் பதவி இடங்களுக்கு ஜூன் 10ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினர் பதவி இடங்களுக்கு ஜூன் 10ல் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களிலும் 57 உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., எம்.பி.,க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்ட 6 எம்.,பி.,க்கள் மற்றும் 14 மாநிலங்களில் இருந்து தேர்வான 51 எம்.பி.,க்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் நிறைவு பெறுகிறது.

ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை ஒரு மாதம் முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், 57 இடங்களுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் மே 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: