பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன்: வழக்கறிஞர் பிரபு பேட்டி

டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன் என வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் குறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு விளக்கம் அளித்தார்.

எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆளுநருக்கு ஒன்றிய அரசு ஏன் வாதிட வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆளுநர் ஒன்றிய அரசுக்கு தான் அறிக்கை அனுப்பி உள்ளார். ஐபிசி குற்றங்கள் மத்திய அரசின் கீழ் தான் வரும். ஐபிசி குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கு மத்திய அரசே தண்டனை வழங்கும் என்பது தவறான வாதம். பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன். அடுத்த வாரத்தில் பேரறிவாளனை விடுதலை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: