வேதாரண்யம் பகுதியில் மழையில் தப்பிய எள் சாகுபடி-விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையில் எள் சாகுபடி தப்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம், கரியாப்பட்டினம், கருப்பம்புலம், தென்னம்புலம், ஆதனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3000 ஏக்கரில் சம்பா அறுவடைக்கு பின்பு எள் சாகுபடி செய்யபபட்டது.

எள் செடிகள் நன்றாக முளைத்து வந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் எள் செடிகள் உள்ள வழவழப்பான தன்மை இழந்துவிட்டது. இதனால் மகசூல் பாதிக்கபடும் என விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில் மழையில் தப்பித்த எள் செடிகள் கடும் வெயில் காரணமாக தற்போது பூத்து காய்க்க தொடங்கி உள்ளது. மழையால் முற்றிலும் சேதமடைந்து கோடை கால சாகுபடியான எள் சாகுபடி பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் அடைந்திருந்த நிலையில் தற்போது மழையால் சேதமடைந்த எள் செடிகள் மீண்டும் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: