மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியூவில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது வரலாறு காணாத வகையில் நேற்று வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து ரூ.77.41 ஆக வீழ்ச்சி அடைந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியானது ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், ‘‘இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக உண்மைகளை பிரதமர் மோடியால் எப்போதும் மறைத்து வைக்க முடியாது’’ என்று பதிவிட்டுள்ளார்.