சின்னாளபட்டியில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகம் எதிரே நூலகம் உள்ளது. 1985ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலக கட்டிடத்தை நூலக அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நூலகத்தின் பின்பகுதி முட்புதராய் புதர்மண்டி கிடப்பதால் நூலகத்திற்குள் அடிக்கடி பாம்பு, பல்லி, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

மேலும் மழை பெய்தால் நூலகத்திற்குள் மழைத்தண்ணீர் வரும் நிலைமை உள்ளது. நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: