அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன் பின் இந்த மசோதா மீது விவாதம் நடந்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் இருக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், துணை வேந்தரை ஆளுநருக்கு பதிலாக முதல்வரே நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினால் 3 உறுப்பினர்களை அரசு நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என சட்டமசோதாவை தாக்கல் செய்த பிறகு அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும் துணைவேந்தரை வேந்தரான ஆளுநர் நியமிப்பார் என்பதற்கு பதில் அரசு நியமிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: