சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் ஆஜர்

சென்னை: சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். சென்னை தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த 19-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த விக்னேஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், மறுநாள் விசாரணையின் போதே விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட்டார். அதன்பின், இந்த வழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசாரின் முதற்கட்ட விசாரணையாக, தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், விசாரணை கைதி விக்னேஷின் மரண வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார், காவல் ஆய்வாளர் செந்தில்குமாரிடம் பல கேள்விகளை முன்வைத்துள்ள நிலையில், செந்தில்குமார் அளிக்கவுள்ள பதிலை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

Related Stories: