ஸ்ரீவீரராகவர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா: நாளை மறுநாள் தொடங்குகிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா நாளை மறுநாள் (மே மாதம் 6ம் தேதி) காலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதனைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் ஸ்ரீவீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஸ்ரீவீரராகவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த சித்திரை பிரமோற்சவ விழாவின் 3ம் நாள் மே மாதம் 8ம் தேதி கருட சேவையும், 7ம் நாள் மே மாதம் 12ம் தேதி காலை 7.30 மணிக்கு தேர் திருவிழாவும், பிரமோற்சவத்தின் 9வது நாள் மே மாதம் 14ம் தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீவீரராகவ பெருமாள் தேவஸ்தான கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத்  மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: